Thursday, March 6, 2014

மகளிர் தின சிறப்பு பதிவு


நித்தம் நித்தம் நித்திரையிழந்து
மாதம் பத்து பாதுகாத்து
நிலத்தில் தடம் பதித்த நாள் முதல்
நினைவெல்லாம் உன்னை கொண்டவள்

உடன் பிறந்த உற்றதுணை
உதிரம் பகிர்ந்த உமையவள்
உலகம் உனக்கு கற்றுத்தந்து - நீ
உவகை கொள்வதில் உயிர் வாழ்பவள்

கலங்கரை விளக்கம் கைகாட்டும் மரம்
கண்ணீர் துடைக்கும் கரம்
காற்றில் கலந்த கீதம் - உன்
கவலை கலைக்கும் தோழி

பெற்றோர் மறந்து உற்றார் மறந்து
சுற்றார் மறந்து உலகே நீயாய்
அக்கினி தேவன் சாட்சியாய்
உன் கரம் பற்றிய தேவதை

மீசை பிடித்திழுத்து தோளில் சாய்ந்து
உன்னுதிரத்தில் உருவான மங்கையவள்
உன் குலம் காக்க வந்த குலமகள்
உன் தவம் கலைக்க வந்த தெய்வத்திருமகள்

பாரததேவிஎன்றும் பூமாதேவிஎன்றும்
நதிகளெல்லாம் அவள் பெயரென்றும்
புனைந்ததேல்லாம் போதும்

அன்னமிடும் அன்னப்பூரணி
கல்விதரும் கலைமகள்
சுபிட்சம் தரும் சுபலட்சுமி என்று
நிழற்படம் நிறைக்கும் தெய்வங்களாயிருன்தது போதும்

கட்சி தலைவராய், குடியரசுத்தலைவராய்
முதலமைச்சராய் மக்களவை சபாநாயகரை
பாரதம் முழுக்க பூவையரிடத்தில்

கள்ளிப்பால் தாண்டி கருக்கலைக்கும் கல்லறைகள் தாண்டி
கல்வி கற்க காதல் செய்ய
நாம் வளர நாடு வளர
வேண்டுமப்பா இந்த கன்னிகையர் !