அறை நடுவில் வேர் விட்டிருந்த
யாரோ நட்ட வேப்பமரம்..
காற்றெங்கும்
வியாபித்திருந்த
எனக்கு
கொஞ்சமும் ஆகாத ரோஜாமணம்..
அதிகாலை
தொட்டு அணையாமல்
உருகும்
மெழுகுவர்த்திகள்..
யார் யாரோ வந்து போக
நெருக்கமானவர்கள்
கண்ணீர் துடைக்க
யத்தனிக்கையில்
தான் உணர்கிறேன்
இறந்து
ஓராண்டு ஆனதென்று..