ஐப்பசி மாத மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது.
ஆபீஸிலிருந்து வெளியே வந்த தயாளன் வேகமாக ஓடி காரினுள் ஏறினான்.
"வீட்டுக்கு தானனே"
"ஆமா காளி"
கேட்டை விட்டு ரோட்டிற்க்கு வந்தது பொலிரோ. எதிர் வரும் எந்த வண்டியுமே தெரியவில்லை.
"மெதுவாவே போப்பா"
"சரி னே"
கார் மெயின் ரோட்டிலிருந்து இடதுபுறமாக தெருவில் இறங்கியது. பெய்த மழையினால் உருவான சகதியில் உருண்டு வந்த டயர் திடீர் பிரேக்கினில் நின்றது. பைல்களை மேய்ந்து கொண்டிருந்த தயாளன் நிமிர்ந்து பார்த்தான்.
"என்னாச்சுப்பா"
"தெரியலனே, மழ பேஞ்சதுல ஏதாச்சும் மரம் விழுந்துருக்கும். என்னனு பாக்குறேன்"
காளி காரை திறந்து இறங்கிய சில நொடிகளிலேயே ஆ என்ற அலறல் சத்தம் கேட்டது. வேகமாக பைல்களை நகர்த்தி விட்டு காரிலிருந்து இறங்கினான் தயாளன். இறங்கிய வேகத்தில் அவன் முதுகில் விழுந்தது ஒரு வெட்டு. சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவன் உடல் பதம்பார்க்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்தான் தயாளன். அவன் குருதி மழை நீரோடு கலந்து ஓட ஆரம்பித்தது