Thursday, December 4, 2014

நினைவுச்சில்லுகள்

கோவில் யானை
திருவிழா பலூன்
மணல் வீடு
அழி ரப்பர்
Tom & Jerry
.. நிரம்பிய பால்யம்

முகப்பரு
அரும்பு மீசை
ரெட்டை ஜடை பெண்கள்
Wet dreams
Public exams
நாயக பிம்பங்கள்
.. கொண்ட பதின் வயது

கல்லூரி
நட்பு
காதல்
வேலை
பிரிவு
பொறுப்பு
ஏமாற்றம்
.. அடங்கிய இருபதுகள்

கால் நூற்றாண்டு கடந்த பின்
புதையலை தேடிய
ஒரு நெடுந்தூர பயணத்தின்
பின்னிரவின் கனவில்
வந்து விழுந்த நினைவுச்சில்லுகள் !

Monday, April 28, 2014

வாயை மூடி பேசவும்

ஒரு சுவாரசியமான Concept + சில  பல காமெடிகள் + அங்கங்கே தொய்வடையும் திரைக்கதை = வாயை  மூடி பேசவும்

துபாய் இளவரசர் போல் இருக்கிறார் துல்கர் சல்மான். மம்முட்டி மகன் என்பதற்க்காகவாது இன்னும் நல்லா நடிக்கணும் சாரே !

கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் உர்ரென்று நஸ்ரியா. அதையும் மீறி காதலன் வரும் போது சல்மானை மறைய சொல்லுமிடத்திலும்.. ஜவ்வு மிட்டாய்க்கு ஆசை படும் போதும்.. Typical நஸ்ரியா Brand Expressions!

மதுபாலா Comeback வரும் அளவிற்கு ஒன்றும் இல்லையே இந்த Characterல். அப்பப்ப பரத நாட்டிய expressionகள் மட்டும் உண்டு

"நான் எப்போமே சிரிக்க மாட்டேன்" எனும் வினு சக்ரவர்த்தி
"பூமேஷ்" ஜான் விஜய்
"ஏழாவது ரௌண்டு, மில்லி" என்று லந்து கொடுக்கும் ரோபோ சங்கர்
"வாயிலயா வந்து வைக்க முடியும்" எனும் பாண்டிய ராஜன்
என படத்துக்கே Thumbs-Up சேர்ப்பது இந்த Side characters தான்

மலை பிரதேச கதைக்களம் என்பதிலே பாதி வேலை முடிந்து விடுகிறது  ஒளிப்பதிவாளருக்கு. நஸ்ரியா, சல்மான் வீடு தொடங்கி அத்தனை locationகளும் அவ்வளவு அழகு

சோபிக்காத பாடல்கள். வசனமில்லாத பின் பகுதியில் English drama பாணி பின்னணி இசையை நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர்

Bore அடிச்சாலும்.. தாராளமா ஒரு தடவ பக்கலாம்பா ! 

Thursday, March 6, 2014

மகளிர் தின சிறப்பு பதிவு


நித்தம் நித்தம் நித்திரையிழந்து
மாதம் பத்து பாதுகாத்து
நிலத்தில் தடம் பதித்த நாள் முதல்
நினைவெல்லாம் உன்னை கொண்டவள்

உடன் பிறந்த உற்றதுணை
உதிரம் பகிர்ந்த உமையவள்
உலகம் உனக்கு கற்றுத்தந்து - நீ
உவகை கொள்வதில் உயிர் வாழ்பவள்

கலங்கரை விளக்கம் கைகாட்டும் மரம்
கண்ணீர் துடைக்கும் கரம்
காற்றில் கலந்த கீதம் - உன்
கவலை கலைக்கும் தோழி

பெற்றோர் மறந்து உற்றார் மறந்து
சுற்றார் மறந்து உலகே நீயாய்
அக்கினி தேவன் சாட்சியாய்
உன் கரம் பற்றிய தேவதை

மீசை பிடித்திழுத்து தோளில் சாய்ந்து
உன்னுதிரத்தில் உருவான மங்கையவள்
உன் குலம் காக்க வந்த குலமகள்
உன் தவம் கலைக்க வந்த தெய்வத்திருமகள்

பாரததேவிஎன்றும் பூமாதேவிஎன்றும்
நதிகளெல்லாம் அவள் பெயரென்றும்
புனைந்ததேல்லாம் போதும்

அன்னமிடும் அன்னப்பூரணி
கல்விதரும் கலைமகள்
சுபிட்சம் தரும் சுபலட்சுமி என்று
நிழற்படம் நிறைக்கும் தெய்வங்களாயிருன்தது போதும்

கட்சி தலைவராய், குடியரசுத்தலைவராய்
முதலமைச்சராய் மக்களவை சபாநாயகரை
பாரதம் முழுக்க பூவையரிடத்தில்

கள்ளிப்பால் தாண்டி கருக்கலைக்கும் கல்லறைகள் தாண்டி
கல்வி கற்க காதல் செய்ய
நாம் வளர நாடு வளர
வேண்டுமப்பா இந்த கன்னிகையர் !

Saturday, February 15, 2014

தட்டத்தின் மறையத்து



NSS camp. சிறப்புரையாற்ற வந்த கந்தசாமி சார் சொன்னது இது. “காதல் என்ன பேனா வா? செட் ஆகுமா, நீடித்து நிலைக்குமா னு யோசித்து வாங்க. அது ஒரு feeling பார்த்த உடன் வரணும். “love at first sight” தான் உண்மையானது…”  யோசித்து பார்த்தால் இதுவும் உண்மை தான். சினிமாவில் கூட Romantic படங்களாக கொண்டாடப்படும் அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, VTV என எல்லாமே  இந்த அடிப்படையில் தான். அந்த வரிசையில் தட்டத்தின் மறையத்து..

ஹிந்து ஹீரோ முஸ்லிம் ஹீரோயின் என்றபாம்பேகாலத்திய கதை. முடிந்தவரை பிரச்சனைகள் தவிர்த்து கவிதையாய் படத்தை வடித்திருக்கிறார் இயக்குனர் . ஹீரோ நிவின் உங்களையும் என்னையும் போலதான் . Makeup, costume லாம் கூட இயல்பாய். இஷா தல்வார் பேரழகு. இவருக்கு சுத்தமாக நடிக்க வராது என்று உணர்ந்து முக்கிய காட்சிகளில் கூட நிவினின் நடிப்பை வைத்தே சமாளித்திருப்பது இயக்குனர் சாமர்த்தியம் . இசை தேன்.. பிற மொழி பட பாடலை forward செய்யாமல் நான் பார்த்த முதல் படம் இது தான். மலையாளம் புரியா விட்டாலோ subtitle இல்லாமல் படம் பார்த்தாலோ சில smiley களை இழக்க நேரலாம்..

சரி.. இதை தவிர படத்தில் என்ன இருக்கிறது

1. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நாயகன் பொறுப்பில்லாதவனாக வோ இல்லை எழுச்சி நாயகனாகவோ தான் சித்தரிக்க படுகிறான் . ஆனால் மிதமாக கட்சி சார்பு கொண்டோரை காட்சி படுத்தியதாக நினைவில் இல்லை. இந்த படத்தின் நாயகன் கம்யூனிச இயக்கத்தில் இருப்பவன். கம்யூனிசம் என்றாலே தோழன் தோழி என்று தான் இங்கு வரையறுக்க பட்டுள்ளது. ஆனால் அவனேபார்த்த உடன்’ காதலில் விழுகிறான். சமூக அக்கறையும் காதலும் பெரும் பாலும் முரணாக காண படுகிறது . இது ஒரு பக்கம் இருக்க இரண்டையுமே பொறுப்பில்லாததாக பார்க்கும் ஒரு கூட்டமும் இங்குண்டு.

2. படத்தில் ஒரு காட்சியில் இஷாவுடன் இருக்கும் போது சில முஸ்லிம் ஆட்கள் வந்து நிவினை மிரட்டுவார்கள். சண்டைகாட்சிக்கு scope உள்ள இந்த காட்சியில் பிரச்சனைகள் கிளப்பாமல் ஹீரோவின் முஸ்லிம் நண்பன் வந்து அழைத்து செல்வார். மதம் என்றில்லை எந்த விஷயத்திலும் சிறுபான்மையினரின் உணர்வுகள் சினிமாவில் பிரதிபலித்ததில்லை உண்மையில் இது போன்ற காட்சிகள் மிகுந்த ஆசுவாசத்தை தரும். ஆனால் நாமோ இன்னும் விஸ்வரூபம் துப்பாக்கி என்று மேலும் மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே பேசி கொண்டிருக்கிறோம்

3. படத்தில் நாயர் மேனன் என்று சாதியை வைத்து நகைச்சுவையாய்  சில காட்சிகள் வருகிறது. தமிழில் இது போன்ற காட்சிகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளே தென்படவில்லை. சாதியை அழிக்க நினைப்பதைவிட இது போன்ற பகடிகள் மூலம் அதன் வீரியம் குறைக்க படலாம் என்பதென் எண்ணம்.