NSS camp. சிறப்புரையாற்ற
வந்த கந்தசாமி சார் சொன்னது இது.
“காதல் என்ன பேனா வா?
செட் ஆகுமா, நீடித்து நிலைக்குமா
னு யோசித்து வாங்க. அது ஒரு
feeling பார்த்த உடன் வரணும். “love at first sight” தான் உண்மையானது…” யோசித்து
பார்த்தால் இதுவும் உண்மை தான்.
சினிமாவில் கூட Romantic படங்களாக கொண்டாடப்படும் அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, VTV என எல்லாமே இந்த அடிப்படையில் தான். அந்த
வரிசையில் தட்டத்தின் மறையத்து..
ஹிந்து
ஹீரோ முஸ்லிம் ஹீரோயின் என்ற “பாம்பே” காலத்திய
கதை. முடிந்தவரை பிரச்சனைகள் தவிர்த்து கவிதையாய் படத்தை வடித்திருக்கிறார் இயக்குனர்
. ஹீரோ நிவின் உங்களையும் என்னையும்
போலதான் . Makeup, costume
லாம் கூட இயல்பாய். இஷா
தல்வார் பேரழகு. இவருக்கு சுத்தமாக
நடிக்க வராது என்று உணர்ந்து
முக்கிய காட்சிகளில் கூட நிவினின் நடிப்பை
வைத்தே சமாளித்திருப்பது இயக்குனர் சாமர்த்தியம் . இசை தேன்.. பிற
மொழி பட பாடலை forward செய்யாமல்
நான் பார்த்த முதல் படம்
இது தான். மலையாளம் புரியா
விட்டாலோ subtitle இல்லாமல் படம் பார்த்தாலோ சில
smiley களை இழக்க நேரலாம்..
சரி.. இதை தவிர படத்தில்
என்ன இருக்கிறது
1. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நாயகன் பொறுப்பில்லாதவனாக வோ
இல்லை எழுச்சி நாயகனாகவோ தான்
சித்தரிக்க படுகிறான் . ஆனால் மிதமாக கட்சி
சார்பு கொண்டோரை காட்சி படுத்தியதாக நினைவில்
இல்லை. இந்த படத்தின் நாயகன் கம்யூனிச இயக்கத்தில்
இருப்பவன். கம்யூனிசம் என்றாலே தோழன் தோழி
என்று தான் இங்கு வரையறுக்க
பட்டுள்ளது. ஆனால் அவனே ‘பார்த்த உடன்’
காதலில் விழுகிறான். சமூக அக்கறையும் காதலும்
பெரும் பாலும் முரணாக காண
படுகிறது . இது ஒரு பக்கம்
இருக்க இரண்டையுமே பொறுப்பில்லாததாக பார்க்கும் ஒரு
கூட்டமும் இங்குண்டு.
2. படத்தில் ஒரு காட்சியில் இஷாவுடன்
இருக்கும் போது சில முஸ்லிம்
ஆட்கள் வந்து நிவினை மிரட்டுவார்கள்.
சண்டைகாட்சிக்கு scope உள்ள இந்த காட்சியில்
பிரச்சனைகள் கிளப்பாமல் ஹீரோவின் முஸ்லிம் நண்பன் வந்து அழைத்து
செல்வார். மதம் என்றில்லை எந்த
விஷயத்திலும் சிறுபான்மையினரின் உணர்வுகள் சினிமாவில் பிரதிபலித்ததில்லை உண்மையில் இது போன்ற காட்சிகள்
மிகுந்த ஆசுவாசத்தை தரும். ஆனால் நாமோ
இன்னும் விஸ்வரூபம் துப்பாக்கி என்று மேலும் மேலும்
இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே பேசி கொண்டிருக்கிறோம்
3. படத்தில்
நாயர் மேனன் என்று சாதியை
வைத்து நகைச்சுவையாய் சில
காட்சிகள் வருகிறது. தமிழில் இது போன்ற
காட்சிகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளே தென்படவில்லை.
சாதியை அழிக்க நினைப்பதைவிட இது
போன்ற பகடிகள் மூலம் அதன்
வீரியம் குறைக்க படலாம் என்பதென்
எண்ணம்.
No comments:
Post a Comment