அப்பா மிக தீவிரமான விநாயகர்
பக்தர். வீட்டு பூஜையறையில் 80 சதவீதம்
விநாயகர் படங்கள் தான். சிலையாக,
படமாக என்று. பூஜைக்கு பூக்கள்
போடும் போதும் பாகுபாடு உண்டு.
கிருஷ்ண ஜெயந்தியானாலும் விநயாகருக்குதான் அதிகம். கேட்டால் எல்லா
கடவுளும் ஒன்றுனு லாஜிக் பேசுவார்.
இத்தனை வருடங்களில் ஊர் பிள்ளையார் கோவிலில்
சாமி கும்பிடாமல் கடை திறந்ததே இல்லை.
தன் எல்லா பிரச்சனைகளும் பிள்ளையாரால்
தீர்க்கப்படும் என்று உறுதியாக நம்புகிறவர்.
சென்ற வருடம் சென்னையில் இருந்த
போதும் விநாயகர் சதுர்த்தியன்று கோவிலுக்கு போகவில்லை. இந்த வருடம் Indoreல்
அப்பாவையும் பிள்ளையாரையும் மிஸ் செய்வதாக தோணியது.
இங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. நம்மூர் மாதிரி இல்லை.
ஆட்டமும் பாட்டமுமாக. பிங்க் கலர் பிள்ளையார்
சிலை. கற்பக விநாயகர் அளவுக்கு
அம்சமாக இல்லை. ஆனால் இதான்
பிள்ளையாரின் வசதியே. எந்த உருவத்தில்
வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். இணையத்தில் கம்ப்யூட்டர் பிள்ளையார், டூ பீசில் சீனா
தானா பிள்ளயாரெல்லாம் காண நேர்ந்தது. மண்ணை
பிடித்து வைத்தும் உருவாக்கலாம். பூஜை முடித்ததும்
சிலை ஊர்வலமாக எடுத்து செல்ல பட்டது.
போகும் வழியெங்கும், காலேஜில் "அஞ்சும் அஞ்சும் பத்து
mechanical தான் கெத்து" என்பது போல்
"ஏக் தோ சீன் சார்
கணபதிக்க ஜெய் ஜெய் மார்"
என்ற கோஷங்கள். உண்மையில் இது போன்ற கொண்டாட்டங்களுக்காகவே
பண்டிகைகள். இதை தான் நாம் போலீஸ்
துணையுடன் கொண்டாடும் நிலைமையில் விட்டிருக்கிறோம்.
அருமை......
ReplyDeletehttp://selvaganapathyk.blogspot.in/ try this
ReplyDelete